சிறப்பு கிராம சபை கூட்டம்
சிவந்திபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
சிவந்திபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் 2020 முதல் 2022 வரை நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை தொடர்பாக நடந்த இந்த கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். சமூக தணிக்கை வள அலுவலர் பிரேமா தீர்மானம் வாசித்தார். இதில் 6-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தங்க ராஜா மற்றும் சிவந்திபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலர் வேலு, வரித்தண்டலர் முத்துக்குட்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.