10 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்
வேலூர் மாநகராட்சியில் 10 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரம் மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சியிலும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி 4 மண்டலங்களிலும் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது. சூளைமேடு, வசந்தபுரம், பனந்தோப்பு, சைதாப்பேட்டை, காந்திநகர், வ.உ.சி.நகர், விருதம்பட்டு உள்ளிட்ட இடங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்தனர்.
காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் நடமாடும் குழுக்கள் மூலமும் பள்ளிகள், அங்கன்வாடிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.