சேலம் வழியாக நாளை கோவை-தன்பாத் இடையே சிறப்பு கட்டண ரெயில்
சேலம் வழியாக நாளை கோவை-தன்பாத் இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய இன்று முன்பதிவு செய்யலாம்.
சேலம் வழியாக கோவை-தன்பாத் இடையே நாளை (புதன்கிழமை) சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்-03358) இயக்கப்படுகிறது. நாளை நள்ளிரவு 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயில், ஈரோடு வழியாக சேலத்திற்கு அதிகாலை 3.20 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கிருந்து 3.30 மணிக்கு ரெயில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா வழியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. எனவே, கோவை-தன்பாத் சிறப்பு கட்டண ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.