மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் 21-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

Update: 2023-09-15 19:03 GMT


கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் 21-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

சிறப்பு முகாம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 21-ந் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் ்www.vidyalaxshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாள் அன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்

முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் கடன் ஆணைகள் வழங்கப்படும். விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் மூன்று புதிய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், இருப்பிட சான்று, வருமானச்சான்று, ஜாதி சான்று, ஆதார், பான் கார்டு ஆகியவற்றின் நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட உறுதிச் சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

அதேபோல கல்விக்கடன் விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மேற்படிப்பு படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்