வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

வடுக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்

Update: 2023-07-10 19:30 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட தர்ம வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வடுகபைரவருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வடுகபைரவர் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்