அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Update: 2023-03-21 20:22 GMT

மேச்சேரி:-

மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இந்த சிறப்பு சந்தன காப்பு அம்மனின் அலங்காரத்தை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருவது வழக்கம் ஆகும். மேலும் அமாவாசை அன்று சாமி தரிசனம் செய்வதற்காக அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே சேலம், தர்மபுரி மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று பங்குனி அமாவாசையையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு சந்தான லட்சுமி சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்