தேய்பிறை அஷ்டமி: வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்

Update: 2023-02-13 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தர்ம வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வடுக பைரவர் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் சன்னதி முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வடுகபைரவருக்கு 26 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வடமாலை சூட்டப்பட்டு மலர் மாலையுடன் விபூதி அலங்காரத்தில் வடுகபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்