சிறப்பு கடன் முகாம்
நாட்டறம்பள்ளியில் கலெக்டர் தலைமையில் சிறப்பு கடன் முகாம் நடந்தது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நாட்டறம்பள்ளி வட்டார அளவில் கல்விக் கடன், விவசாயிகளுக்கான பயிர்க் கடன் பெறுவதற்கும், தொழில் முனைவோர் தொழில் கடன் பெறுவதற்கும் சிறப்பு கடன் முகாமை நடத்தியது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் ராயநாயக்கன்பேட்டை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மத்திய கூட்டுறவு வங்கி, மல்லகுண்டா, மஞ்சூர் உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.