வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது

Update: 2022-12-25 20:04 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஏசு பிறப்பு விழா கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலிக்கு இறைவார்த்தை சபை மாநில தலைவர் சாந்துராஜா தலைமை தாங்கினார். திருத்தல பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோணி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை எழுந்தருள செய்து தூபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்துமஸ் பாடல்கள், பங்கு இளையோர் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்