சிறப்பு கால்நடை முகாம்
தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.சக்திதாசன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சி.கவுரப்பன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.தியாகராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர் என்.மம்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மு.ஆனந்தன் வரவேற்றார்.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர். கோ.அந்துவன் திட்ட விளக்க உரையாற்றினார். முகாமை குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கால்நடை மருத்துவர்கள் எம்.பி.ரமேஷ்பாபு, எம்ரமேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் ஆயிரத்து 40 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.உமாசங்கர், வேளாண்மை அலுவலர் வி.நித்யா உள்பட கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.