வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
திருப்பத்தூர்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
வாக்காளர் பட்டியலினை சீர்படுத்தும் வகையில் ஒரே வாக்காளரின் பெயர் இருவேறு இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கே நேரடியாக வந்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.