கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்
குடவாசல் தாலுகாவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம் 102 மையங்களில் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. நேற்று திருவீழிமிழலை சரகத்தில் உள்ள விஷ்ணுபுரம் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் நடந்த முகாமை குடவாசல் தாசில்தார் தேவகி ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மற்றும் ரேஷன் கடை ஊழியர்களிடம் பயணிகளிடம் கனிவாக பேசி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெறவேண்டும் என்று கூறினார். இதில் துணைத்தாசில்தார் சரவணகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.