திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக பொதுமக்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாநகரில் நடைபெறும்.
அதன்படி, வேலம்பாளையம் 1-வது மண்டல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் 1, 9-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை, 21-வது வார்டு முதல் 27-வது வார்டு வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபோல் நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலவலகத்தில் நடக்கும் முகாமில், 2-வது வார்டு முதல் 8-வது வார்டு வரையும், 16-வது வார்டு முதல் 20-வது வார்டு வரையும், 30-வது வார்டு முதல் 32-வது வார்டு வரையும் உள்ளவர்களும், நல்லூரில் உள்ள 3-வது மண்டல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் 33-வது வார்டு முதல் 35-வது வார்டு வரையும், 44-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையும், 56, 58-வது வார்டு முதல் 60-வது வார்டு வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மூலபத்திரம்
எஸ்.ஆர்.நகர் ரத்தின விநாயகர் கோவில் மண்டபத்தில் நடக்கும் முகாமில் 28,29,36-வது வார்டு முதல் 43-வது வார்டு வரையும், 52-வது வார்டு முதல் 55-வது வார்டு வரையும், 57-வது வார்டு பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முகாமுக்கு செல்பவர்கள் பத்திரம் நகல், மூலபத்திரம் (2016-க்கு முன்னர்) நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
--------