மருத்துவ சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம்

மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இயலாமை குறித்து மருத்துவ சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-07-12 11:37 GMT

திருவண்ணாமலை

மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இயலாமை குறித்து மருத்துவ சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு தொடர்பான நபர்களின் இயலாமை குறித்த மருத்துவ சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவர் சதீஷ்குமார் பரிசோதனை மேற்கொண்டார். இதில் மோட்டார் வாகன விபத்து விசாரணைக்கான நீதிமன்ற சார்பு நீதிபதி ஜகன்நாதன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், லாயர்ஸ் அசோஷியேசன் சங்கத் தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனா். இதில் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்பெற்றனர்.

இந்த முகாம் 15 நட்களுக்கு ஒருமுறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்