மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மருத்துவச்சான்று
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் 15 வட்டாரங்களில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவச்சான்று வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மன நல மருத்துவர், கண் மருத்துவர் காது மூக்கு தொண்டை மருத்துவர், முந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். இந்த மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அதற்கான முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
அதன்படி 10-ந் தேதி வட்டாரவள மையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடையில் நடக்கிறது. 12-ந் தேதி உழவர் சந்தை அருகில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி, 14-ந் தேதி சேதுபதி மேல்நிலைப்பள்ளி, 16-ந் தேதி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, 17-ந்தேதி என்.எம்.எஸ்.முத்துலட்சுமி அம்மாள் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, 18-ந் தேதி அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 19-ந் தேதி செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வட்டார வள மையம், 21-ந் தேதி கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, 26-ந் தேதி கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 31-ந் தேதி மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையம், அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 2-ந் தேதி பேரையூர் ரோட்டில் உள்ள டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 3-ந் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 6-ந் தேதி அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையம், 7-ந் தேதி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
அடையாள அட்டை
இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.