மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம்
கும்பகோணம் கோட்ட பகுதியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் நாளை(திங்கட்கிழமை) முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடக்க உள்ளது
கும்பகோணம் கோட்ட செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் கோட்ட பகுதியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் நாளை(திங்கட்கிழமை) முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடக்க உள்ளது. அதன்படி கும்பகோணம் நகர், புறநகர், பாபநாசம் நகர், புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர், புறநகர், திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் ஆகிய பிரிவு அலுவலகங்களின் பகுதியை சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது பிரிவு அலுவலகங்களில் தங்களுக்கு உரிய ஆவணங்களுடன் அதற்கான கட்டணமாக ரூ.708 செலுத்தி மின் இணைப்பு பெயர் மாற்றம் சேவையை செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.