மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்;

Update: 2022-06-30 12:35 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் கலந்து கொண்டனர்.

விண்ணப்பதாரர்களை காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்யும் இடத்தில் கூட்டம் அலைமோதியது.

ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டதால் அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அலுவலர்கள் அவர்களை வரிசையாக வர சொல்லியும் யாரும் வரிசையாக வராததால் அந்த இடத்தில் சிக்கி கொண்ட முதியவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் வழக்கமாக இருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் போலீசார் இல்லாததால் அலுவலர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் பரபரப்பாகவே காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்