விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேரவும், இலவச கணினி பயிற்சியில் சேரவும் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பதற்கும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், துணை தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், சேவை மைய பயிற்றுனர் சூர்யா, ஊராட்சி செயலாளர் இளந்திரையன், மக்கள் நலப்பணியாளர் மல்லிகா, பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.