மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

Update: 2023-07-17 19:59 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் கோட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கும்பகோணம் பஸ் நிலையம் அருகே உள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்திலும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராமசேவை கட்டிடத்திலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தஞ்சை மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்