மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திட்டச்சேரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-01-13 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன், திட்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிதல் உள்ளிட்டவை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்