மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், வீட்டுமனை பட்டா, மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். அதனை நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக்கொண்டு தீர்வு காண பரிந்துரை செய்தனர். முகாமில், எலும்பியல், நரம்பு மண்டலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை டாக்டர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.