ஆதார் திருத்த சிறப்பு முகாம்

திருச்செந்தூரில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2023-09-30 19:00 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டுநல பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சல் அலுவலகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் ஆதார் திருத்த சிறப்பு முகாமை நடத்தியது.

கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலக கிளை துணை அஞ்சல் அலுவலர் அமலா ரெனின்சியா, திருச்செந்தூர் அஞ்சலக வணிக மேம்பாட்டு அலுவலர் முகமது சமீம், கணினி நிர்வாகி சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் போன்றவற்றில் திருத்தங்களை செய்தனர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்