தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது.

Update: 2023-02-07 20:30 GMT

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடக்கிறது. அதன்படி, தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்கலாம்.

இதற்கான தற்போதைய வட்டி 7.6 சதவீதம். கணக்கு தொடங்கியது முதல் 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். ஒரு ஆண்டில் குறைந்தது ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்தலாம். இந்த திட்டத்தில் செலுத்தும் பணத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. முதிர்வு காலம் 21 ஆண்டுகள். திருமணத்துக்கு 1 மாதம் முன்பாகவே முடித்துக்கொள்ளும் வசதியும் உண்டு. பெண் குழந்தையின் மேற்படிப்புக்கு கட்டிய தொகையில் 50 சதவீதம் எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமின் மூலம் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்