'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமக்கோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் சிறப்பு சிகிச்சை முகாம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருமக்கோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2022-12-01 18:45 GMT

தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருமக்கோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் அதிகரித்து இருப்பதாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கால்நடை மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி திருமக்கோட்டை அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் பெரியம்மை நோய்க்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.

290 பசுக்கள்

இந்த முகாமில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அழைத்து வந்தனர். இதில் 290 பசுக்கள், 350 ஆடுகள், 400 கோழிகள், 27 நாய்கள் ஆகியவற்றிருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா தனபாலன், துணைத் தலைவர் பத்மா சுப்பிரமணியன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் சந்திரநாதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராஜேஸ்வரி, கலைவாணி, பிரியதர்ஷினி, ஆவணி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்