சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு பஸ்கள்

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-01-13 18:45 GMT

சுரண்டை:

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் சொந்த ஊருக்கு வந்தவர்கள் சென்னை, கோவை செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு செல்வதற்கு வசதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), 18-ந்தேதி (புதன்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் சுரண்டையில் இருந்து மாலை 4 மணிக்கு சென்னைக்கும், இரவு 7.30 மணிக்கு கோவைக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விவரங்களுக்கு சுரண்டை பஸ் நிலைய அலுவலர்களை 6383939571, 9629211549 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்