சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் முன்னோடி முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவஜோதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர். இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா, இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்டவை குறித்து 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் முருகுசெல்வி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.