களை கட்டிய கால்பந்து இறுதி போட்டி: குமரி மீனவ கிராமங்களில் பெரிய திரையில் பார்க்க விசேஷ ஏற்பாடு

உலக கோப்பை கால்பந்து இறுதியை போட்டியை குமரி மீனவ கிராமங்களில் பெரிய திரையில் பார்க்க விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் திரண்டு கண்டுகளித்தனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கொல்லங்கோடு,

உலக கோப்பை கால்பந்து இறுதியை போட்டியை குமரி மீனவ கிராமங்களில் பெரிய திரையில் பார்க்க விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் திரண்டு கண்டுகளித்தனர்.

கால்பந்து போட்டி

உலககோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 30- க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த போட்டியின் இறுதியில் நேற்று அர்ஜென்டினா அணியும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் மோதின. இது அனைத்து தரப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் தூத்தூர் மண்டல மீனவ கிராமங்களில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இறுதிபோட்டியையொட்டி நேற்று தூத்தூர் மண்டலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் ஒன்றிணைந்து இருநாட்டு கொடிகளையும் கையில் ஏந்தி அவரவர்களுக்கு விருப்பமான வீரர்களின் ஜெர்சிகளை அணிந்து கொண்டு உலக கோப்பை மாதிரிகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பெரிய திரையில்

மேலும் முக்கிய சந்திப்புகளில் பெரிய திரைகள் அமைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரும் கூடி அமர்ந்து விளையாட்டை பார்த்து மகிழ்ந்தனர்.

இவை அனைத்திற்கும் ஒரு படி மேலாக தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் விளையாட்டை பார்க்கும் இடத்திலேயே பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு உணவு பரிமாறியும் விளையாட்டு மைதானம் வடிவில் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பங்குதந்தை உள்பட ஏராளமானோர் இறுதி போட்டியை பார்த்தனர்.

இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்