சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆனி உத்திரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில்ஆனி உத்திரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது.;

Update: 2023-06-25 21:35 GMT

சுசீந்திரம்:

குமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை, ஆவணி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, ஆனி உத்திரம், புரட்டாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம் ஆகிய 6 நாட்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆனி உத்திரத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடராஜருக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன், மஞ்சள், களபம், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜருக்கு அலங்காரம் செய்யப்பட்டு கயிலை வாத்தியங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர். இதேபோல் சுசீந்திரம் பேரம்பலத்தில் உள்ள நடராஜர் சன்னதியிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடந்தது. மேலும், மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு நேற்று ஆனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்