உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, உமாமகேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-06 18:59 GMT

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் கடந்த 17-ந்தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. அதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து திருவாதிரை திருநாளையொட்டி நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. அப்போது நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்