பாலவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காட்டில் பாலவராகி அம்மன் கோவில் உள்ளது.;
முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காட்டில் பாலவராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பால வராகி அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.