சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-01-29 18:49 GMT

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம் நத்தமேடு மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தை மாத அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்