விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;

Update: 2023-01-25 18:30 GMT

கரூர் மாவட்டம், முத்தனூர் வருண கணபதி கோவிலில் சதுர்த்தி முன்னிட்டு வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம், நன்செய் புகளூர், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை விநாயகர், கரைப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்