கட்டாரிமங்கலம் கோவிலில் அழகியகூத்தருக்கு சிறப்பு அபிஷேகம்
கட்டாரிமங்கலம் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு அழகியகூத்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் காலை 9 மணிமுதல் ஹோமம், 10 மணிக்கு அழகிய கூத்தருக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அழகியகூத்தர் அருட்பணி மன்றம் நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.