அன்னப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம் நகர் அன்னப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்ப சாமி கோவில். இக்கோவிலில் அன்னப்ப சாமிக்கு ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி பல்வேறு திரவியங்கள், பால், இளநீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனர்.