சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Update: 2023-07-09 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆனி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்