புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-13 19:11 GMT

புகழூர் காகித ஆலை சார்பில் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான சாய்குமார், கோவில் திருப்பணிக்குழு தலைவரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனதோட்டம் மற்றும் ஆராய்ச்சி) சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (திட்டம் மற்றும் திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன், பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு துணைத் தலைவர் அண்ணாவேலு, காகித ஆலை நிறுவன அலுவலர்கள், பல்வேறு துறை இயக்குனர்கள், கோவில் திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சமணர் படுகைகளை அவர்கள் பார்வையிட்டனர். மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்