அம்பேத்கர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை
வள்ளியூரில் அம்பேத்கர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வள்ளியூர் (தெற்கு):
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வள்ளியூர் உரிமையியல் நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா, துணை தலைவர் கண்ணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணகுடி பஸ்நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் திருவுருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பணகுடி பேரூர் கழகச் செயலாளர் வி.டி.தமிழ்வாணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோபி.கோபாலகிருஷ்ணன், பணகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அய்யப்பன், பேரூர் கழக மகளிர் அணி அமைப்பாளர் ஆனந்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பணகுடி நகர காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பேத்கர் படத்துக்கு பணகுடி நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமையில் மாநில செயலாளர் ஜோதி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி, பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் பூங்கோதை உள்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.