பனை விதைகள் விதைப்பு

பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-10-01 21:03 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் யூனியன் சிதம்பராபுரம் பஞ்சாயத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், 12 ஆயிரம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக தென்கரை குளத்தின் கரையில் 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. பஞ்சாயத்து தலைவர் பேபி முருகன் தலைமை தாங்கி, பனை விதைகளை விதைத்து தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர்கள் மாசானம், கலைச்செல்வி, முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்