தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரா. சுதாகர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் வீரபாகு, தலைமைக் கழக பேச்சாளர்கள் மதுரை பாரதீயன், சிவகாசி சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்