கத்தோலிக்க மறை மாவட்ட தென்மண்டல அன்பிய மாநாடு

மன்னார்புரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட தென்மண்டல அன்பிய மாநாடு நடந்தது.

Update: 2023-05-22 19:07 GMT

இட்டமொழி:

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க தென்மண்டல அன்பிய எழுச்சி மாநாடு நாங்குநேரி யூனியன் மன்னார்புரம் தென் மண்டல மீட்பு மேய்ப்பு பணி வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் மற்றும் தலைவர் அந்தோணிபாப்புசாமி தலைமை தாங்கினார்.

ஊட்டி மறைமாவட்ட ஆயர் மற்றும் தலைவர் அமல்ராஜ், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அ.ஸ்டீபன் ஆண்டகை, முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'கத்தோலிக்க திருச்சபை தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உதவி வருகிறது. அவர்கள் ஏழை-எளிய மக்கள் கல்வி கற்கவும், கல்வி தரம் உயரவும் பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது' என்றார்.

மாநாட்டில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, பங்குதந்தைகள் ஜார்ஜ், ஜான் போஸ்கோ, அல்போன்ஸ், மரியஅரசு, ஜோசப் ரவிபாலன், நெல்சன் பால்ராஜ், எட்வர்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்