தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கோவை தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது

Update: 2022-05-31 15:56 GMT

பொள்ளாச்சி

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கலந்துகொண்டு பேசினார். நகர துணை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பொள்ளாச்சி நகரின் மைய பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வெண்கல சிலை வைக்க மாவட்ட கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுப்பது,

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கருணாநிதி பிறந்த நாளையொட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, தெருமுனை பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது,

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்