தென் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி
தென் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி தொடங்கியது.
சிவகாசி,
தமிழ்நாடு டென்னிகாய்ட் சங்கம், ஹட்சன் டென்னிகாய்ட் சங்கம் இணைந்து நடத்தும் தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன் போட்டி சிவகாசியில் நேற்று மாலை தொடங்கியது. போட்டியை ஹட்சன் சந்திரமோகன், இதயம் ராஜீவ் விக்னேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 72 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் குழுவாகவும், தனிநபர், இரட்டையர் போட்டியாகவும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தொடக்க விழாவில் ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை ஆலோசகர் அஜித் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.