திருப்பத்தூரில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு

குருபூஜை விழாவை முன்னிட்டு திருப்பத்தூரில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்

Update: 2023-10-22 18:45 GMT

இந்திய சுந்திரப்போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குருபூஜை விழா திருப்பத்தூரில் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இதை முன்னிட்டு தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மணிமண்டபத்தையும், பஸ் நிலையம் எதிரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவு ஸ்தூபியையும் நேற்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திர நாயர் ஆய்வு செய்தார்.

மேலும், மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் குழுத்தலைவர் ராமசாமியிடம் நிகழ்ச்சிகள் குறித்தும், முக்கிய பிரமுகர்கள் வரும் வழித்தடம், போலீஸ் கட்டுப்பாட்டு கோபுரம் அமைந்துள்ள இடங்கள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்