தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: மோடி தேவையான உதவிகளை செய்வார் -அண்ணாமலை ஆறுதல்
நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்ணாமலை பார்வையிட்டார்.;
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரை பயணத்தை 4 நாட்கள் ஒத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார்.
அவருடன் சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் பால கணபதி, முரளி யாதவ் உள்பட நிர்வாகிகள் உடன் சென்றிருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை அண்ணாமலை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம், பிரதமர் நரேந்திர மோடி தேவையான உதவிகளை செய்வார். பா.ஜனதா தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள் என்ற தகவலை தெரிவித்து ஆறுதல் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் அண்ணாமலை வழங்கினார்.