வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி

வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது

Update: 2023-05-22 00:13 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. தொடக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார். ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். முதல் நாள் போட்டியில் திருநகர் ஆக்கி கிளப் அணியும், வாடிப்பட்டி ஆக்கி திறன் மேம்பாட்டு மைய அணியும் மோதின. இதில் திருநகர் ஆக்கி கிளப்அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி, எச்.டி.டி.சிஅணி, திருநகர் ஆக்கி கிளப் அணி, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக அணி, வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் அணி, மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, விருதுநகர் ரெட் ரோஸ் ஆக்கி கிளப், மதுரை ஜி.கே. மோட்டார்ஸ் அணி, கோவில்பட்டி ஆக்கி திறன் மேம்பாட்டு மைய அணி ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, வெள்ளைச்சாமி, சந்திர மோகன், செந்தில் குமார், எவர்கிரேட் ஆக்கி கிளப் உறுப்பினர்கள் சரவணன், ராமசாமி, காளிதாஸ், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்