சவுந்தரபாண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்
களக்காடு அருகே சவுந்தரபாண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளம் சவுந்தரபாண்டீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினசரி காலையில் சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடந்து வருகிறது. 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதனை முன்னிட்டு சவுந்தரபாண்டீஸ்வரர்- கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு விஷேச அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன் பின் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தேர் ரதவீதிகளை சுற்றி நிலைக்கு வந்ததும், சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் எழுந்தருளி திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.