சொருபானந்த மகரிஷி குருபூஜை விழா

அரியாண்டிபுரத்தில் சொருபானந்த மகரிஷி குருபூஜை விழா நடந்தது.;

Update: 2022-12-26 19:23 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சொருபானந்த மகரிஷியின் 66-ம் ஆண்டு குருபூஜை விழா மாதேஸ்வர வேதாந்த மடாதிபதி மாதவ குமார சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை அழகப்பா நகர் மாதவானந்த சுவாமிகள், திருமலைப்பாடி வேதாந்த மடாதிபதி சிவானந்த சுவாமிகள், கோவில்பட்டி வேதாந்த மடாதிபதி சொரூபானந்த சுவாமிகள், இளையான்குடி வேதாந்த மடாதிபதி சிவாகுப்புசாமிகள், பார்த்திபனூர் வேதாந்த மடாதிபதி செல்வராஜ் உள்ளிட்ட மடாதிபதிகள் மகா அபிஷேகம், ஆராதனை, மகேஸ்வர பூஜை அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குருபூஜை விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்