தந்தையை பிளேடால் கிழித்த மகன் கைது

கடையத்தில் தந்தையை பிளேடால் கிழித்த மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-08 18:45 GMT

கடையம்:

கடையம் கீழக்கடையம் பகுதியை சேர்ந்தவர் வில்வராஜ் (வயது 63). விவசாயியான இவருக்கு வினோத்குமார் (33) உள்பட இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வினோத்குமார் விவசாய பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த வினோத்குமாரை, வில்வராஜ் கண்டித்துள்ளார். அப்போது வினோத்குமார், எனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை? எனக்கூறி தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து வினோத்குமார், தான் வைத்திருந்த பிளேடால் தந்தை என்றும் பாராமல் வில்வராஜை நெஞ்சு, முகம், தோள்பட்டை பகுதிகளில் கிழித்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்