தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை
தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி அமிர்தாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக் வியாபாரத்திற்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தந்தை முரளி, வேலைக்கு செல்லாமல் இருக்கிறாயே சிரமமாக உள்ளது. எனவே வேலைக்கு செல்லுமாறு கார்த்திக்கை கண்டித்துள்ளார்.
தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திக் நேற்று அதிகாலை வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கார்த்திக்கின் தாயார் ஜெயராணி காலையில் வெளியே வந்து பார்த்தபோது கார்த்திக் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.