விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் முப்புடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன் (வயது 76). இவருடைய மகன் பூதப்பாண்டியன் (42). வீட்டை தனது பெயருக்கு எழுதித்தர தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூதப்பாண்டியன், மூக்கனை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூதப்பாண்டியனை நேற்று கைது செய்தார்.